Categories
உலக செய்திகள்

சூப்பர்….!! செலவே இல்லாமல் மொட்டை மாடியில் நடந்த திருமணம்…. காதல் ஜோடியின் அசத்தல் ஐடியா….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக காதல் ஜோடி  தங்களது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடத்தியுள்ளனர்.

சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் மீசோ மற்றும் யாங் யுன் என்ற காதல் ஜோடி தங்களது திருமணத்தை உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும்  சிறப்பான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா காரணமாக குறித்த தேதியில் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தங்களது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியிலேயே எளிய முறையில் செய்து கொண்டனர். மேலும் உறவினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிறப்பு விருந்து குறித்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |