Categories
மாநில செய்திகள்

சூப்பர் சார்! “தயவு செய்து லஞ்சம் தராதீங்க” இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி….!!!!

எங்கும் லஞ்சம் வாங்கும் இந்த காலத்தில் காரைக்குடி கூத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆன அருள்ராஜ் தயவுசெய்து லஞ்சம் யாரும் தர வேண்டாம். “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற அறிவிப்பு பலகையை தன்னுடைய அலுவலகத்தில் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2014ஆம் வருடம் பணியில் சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்கியது இல்லை என்றும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் லஞ்சம் வாங்கி விடக்கூடாது என்றும் இந்த பலகையை அவர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த செயலுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு தொழிலிலும் நாம் நேர்மையாக இருந்து சம்பாதித்தால் நம்முடைய வாழ்க்கையும் நேர்த்தியாக இருக்கும்.

Categories

Tech |