உலகத்தின் மிகப் பெரிய ஐ டி வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
டி எல் எப் வளாகம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தரமணியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு செயல்பட உள்ள திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனமானது மேலே கூறிய தொகையை தேவைப்படும் கால நேரங்களில் படிப்படியாக முதலீடு செய்ய உள்ளது.
இவ்வாறு வரவுள்ள இந்த வளாகத்தில் இடம்பெற உள்ள தளங்களின் விபரங்களாக, இந்த டி.எல்.எப். டௌன்டவுன் வளாகம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்ட அரங்குகள், பிரத்யேக உணவு கூடங்கள் போன்ற பொது மக்களுக்கு பல வசதிகள் இருக்குமாறு அமைக்கப்பட உள்ளது. மேலும் இது தவிர இன்னும் சில சுவாரசியமான திட்டங்களையும் கொண்டு வர உள்ளது இந்த வளாகம். அது என்னவென்றால், இவ்வளாகக் கட்டிடம் பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், சமூகக் கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது.
இந்நிலையில் இந்த டௌன்டவுன் திட்டமானது, சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டி அமோகமாக தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஜே.எம்.எச். ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், டிட்கோ செயல் இயக்குனர் வந்தனா கார்க், டி.எல்.எப். ரெண்டல் பிசினஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் கத்தார், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இந்திய தலைவர் சதீஷ் கோபி, டி.எல்.எப். உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.