அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய கனவாகவும், இலட்சியமாகவும் இருக்கிறது. ஆனால் வீட்டை கட்ட வேண்டுமானால் கையில் எப்படியாவது பணம் இருப்பு இருக்க வேண்டும். அதற்காக வங்கிகளில் சென்று கடன் வாங்குவோம். ஒரு சில வங்கிகளில் அப்படி வீட்டுக் கடன் வாங்குவதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சில வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்திற்கொண்டு வட்டி வீதத்தை குறைத்துள்ளன.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதத்தை அமல்படுத்தியுள்ளது. வங்கியில் ரூ.75 லட்சம் வரை வீட்டு கடன் வாங்கியவர்களுக்கும் இந்த புதிய வட்டி வீதம் பொருந்தும். அதற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கும் இந்த வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து தொடங்கும். இதையடுத்து இன்று முதல் இந்த வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது.