Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கான நேரம் நீட்டிப்பு…..‌ மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் அன்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணிகளை தொடங்கி வைத்தார்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறக்கப்படாத நிலையில், கடந்த 17-ஆம் தேதி முதல் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான கால அவகாசமானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி அதிகாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கும், மாலை நேரத்திலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கும் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |