தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழைக்காலம் என்றால் தண்ணீர் பல இடங்களில் தேங்குவதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இது போன்ற மழைக்காலங்களில் மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு அவதிப்படுபவர்கள். எனவே அவர்களுக்காக 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் நிலையில் அவர்களுக்கு பால் பவுடர் போன்றவை வழங்கப்படும்.
ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பால் பாக்கெட் குளிர்சாதம் வசதி எதுவும் இல்லாமல் 90 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருப்பதால் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். வாங்கியவுடன் பாலை சூடாக்கி பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு இது உகந்தது என்று தெரிவித்துள்ளது. இந்த பால் பாக்கெட் விலை 500 மில்லி முப்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.