Categories
சினிமா

சூப்பரோ சூப்பர்…… “வெந்து தணிந்தது காடு” படக்குழு வெளியிட்ட புகைப்படம்….. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் மற்றும் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தது. இந்த இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவாரத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் அதில் ஏ.ஆர். ரகுமானின் இசைக்கச்சேரி இடம்பெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள சிம்பு மேக்கிங் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

Categories

Tech |