தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ரயில் பயணத்தின் போது பயணிகள் விருப்பப்பட்ட உணவினை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், பண்டிகை கால உணவு வகைகள் போன்றவைகளும் பயணிகளின் வசதிக்காக தற்போது உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த உணவுகளை பயணிகள் ஐஆர்சிடிசியின் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து வெளியூர் பயணத்தின்போது அங்கு கிடைக்கும் சில பிரபலமான உணவுகளும் பயணிகளுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தைகளுக்கான உணவுகள், சிறுதானிய அடிப்படையிலான உள்ளூர் உணவு வகைகள், ஆரோக்கியம் சார்ந்த உணவு வகைகள் போன்றவைகளும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சதாப்தி மற்றும் ராஜ்தானி போன்ற ரயில்களில் பயணிகளுக்கான கட்டணத்துடன் சேர்த்து உணவு கட்டணமும் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் முன்கூட்டியே உணவுக்கான கட்டணத்தை செலுத்தியும் தங்களுடைய பயணத்தின் போது உணவைப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.