Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சூப்பரா வேலை பாக்குறீங்க” பரிசு வழங்கிய ஆட்சியரின் மகள்…. நன்றி தெரிவித்த போலீஸ்காரர்….!!

போக்குவரத்து போலீஸ்காரரின் பணியை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியரின் மகள் டைரி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் பாஸ்கர பாண்டியன். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனோ மிர்தன்யா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் முகலிவாக்கம் லலிதாம்பாள் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோனோ மிர்தன்யா பள்ளிக்கு செல்லும் வழியில் மணப்பாக்கம்- முகலிவாக்கம் சாலையில் போக்குவரத்து பணியை சரி செய்யும் போக்குவரத்து போலீஸ்காரரான சாலமன் சதீஷை பார்த்து கை காட்டி வந்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக சிறுமி சாலமன் சதீஷுக்கு அன்பு பரிசாக டைரி ஒன்றை வழங்கியுள்ளார். அதனை வாங்கிக்கொண்ட சாலமன் சதீஷ் சிறுமிக்கு புன்னகையுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |