Categories
தேசிய செய்திகள்

சூப்பரான அறிவிப்பு…. இனி எப்போது வேண்டுமானாலும்…. பென்சன் வாங்குவோர் நிம்மதி…!!!

பென்சன்  திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  அறிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்  EPS-95 பென்சன்  திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் ஆயுள் சான்றிதழ்  சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நிறைய வழிகள் உள்ளன. அது பென்சன் வழங்கும் வங்கியில் சமர்ப்பிக்கலாம். மேலும் பிஎப் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கலாம். அது கஷ்டமாக இருந்தால் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் ஆப் மூலமாகவோ போஸ்ட் ஆபீஸ் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இதனை அடுத்து போஸ்ட் மேன் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல் உமாங் மொபைல் ஆப் மூலமாகவும் பென்சன் பயனாளிகள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும்போது பிபிஓ நம்பர், ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு விவரம், மொபைல் நம்பர் போன்றவை தேவைப்படும். இந்த மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தற்போது கொரோனா போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டுதான் பென்சன் வாங்குவோருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் EPS-95 பென்சன் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சலுகை வழங்கப்பட்டிருந்தாலும், பென்சன் வாங்கும் மத்திய அரசு ஊழியர்கள் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

Categories

Tech |