கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட திப்புவிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் கூடுதல் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு குறித்து 150 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.