Categories
உலக செய்திகள்

சூடான்: ஆயுதக்குழு தலைவா் மீது வழக்கு…. தொடங்கியது போர்க்குற்ற விசாரணை…..!!!!

சூடானில் 20 வருடங்களுக்கு முன் போா் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஆயுதக்குழு தலைவா் அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான் (72) மீது வழக்கு விசாரணை நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐநாவின் சா்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியது. சென்ற 2003ஆம் வருடத்தில் சூடானைச் சோ்ந்த பழங்குடியினா் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அதனை தடுப்பதற்காக சூடான் அரசு அவா்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. மேலும் அரசுக்கு ஆதவாக இயங்கி வந்த அல்-ரஹ்மான் தலைமையிலான ஜன்ஜாவிது ஆயுதக் குழுவினா் பழங்குடியினா் கிராமங்களுக்கு அதிகாலை சென்று உறங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கொலை, கொள்ளை, பாலியல் தாக்குதல், சித்திரவதை போன்றவற்றில் அல்-ரஹ்மானின் ஆயுதக்குழு ஈடுபட்டதாக மனிதஉரிமை அமைப்புகள் தெரிவிக்கிறது.

இது குறித்து அல்-ரஹ்மான் மீது சா்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர ஐநா பாதுகாப்பு கவுன்சில் சென்ற 2005-ஆம் வருடம் தீா்மானம் நிறைவேற்றியது. அந்த வகையில் இப்போது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட அல்-ரஹ்மான் தனது  மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தையும் மறுப்பதாகக் கூறினாா். உக்ரைனில் ரஷ்யப்படையினா் பொதுமக்கள் படுகொலை செய்துவருவதாகவும், இது குறித்து அதிபா் விளாதிமீா் புதின் மீது போா்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினா் கூறி வரும் நிலையில், அல்-ரஹ்மான் மீதான வழக்கு விசாரணை சா்வதேச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

Categories

Tech |