நண்டு குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
நண்டு – ஒரு கிலோ
சின்ன வெங்காயம் – இரண்டு கோப்பை
தக்காளி – நான்கு
பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் தூள் – மூன்று டேஹ்க்கரண்டி
தேங்காய் விழுது – இரண்டு தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்,புளியை ஊறவைத்து கரைக்கவும் ,அதனுடன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள்,தேங்காய் விழுது சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் தாளித்து அதனுடன் கருவேப்பில்லை சேர்த்து வெங்காயம் சேர்க்கவும்
அதன் பின் வெங்காயம் நன்றாக வதங்கியது தக்காளி சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் நண்டை சேர்த்து அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்.உப்பு சேர்த்து மூடி வைக்கவும் பத்து நிமிடம் கொதித்த பின் இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட நண்டு குழம்பு ரெடி