Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தந்தூரி சிக்கன் சாலட் ரெடி …!!

தந்தூரி சிக்கன் சாலட்

தேவையான பொருட்கள் :

எலும்பு இல்லாத கோழி இறைச்சி- 1 கிலோ

தயிர் -4 டீஸ்பூன்

தந்தூரி சிக்கன் பொடி- 4 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது- 1டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எலுமிச்சை- 1

எண்ணெய் -தேவையான அளவு

லெட்டியூஸ் -சிறிது

தக்காளி- 4

வெள்ளரிக்காய் -2 நறுக்கியது

கேரட்- 1 துருவியது

சாலட் டிரஸ்ஸிங்- நம் சுவைக்கு ஏற்ப

Image result for தந்தூரி சிக்கன் சாலட்

செய்முறை :

தந்தூரி சிக்கன் சாலட் செய்வதற்கு முதலில் கோழி இறைச்சி, தயிர், தந்தூரி சிக்கன் பொடி,

இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றை, அதில் கோழி இறைச்சியைப் போட்டு மிதமான தீயில் பொரிய விடவும். பிறகு லெட்டியூஸ், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட் ஆகியவற்றை கலந்து, அதில் தந்தூரி சிக்கனைப் போட்டு, சாலட் டிரஸ்ஸிங் ஊற்றி உடனே பரிமாறவும்.

சுவையான தந்தூரி சிக்கன் சாலட் தயார்.

Categories

Tech |