கிராமத்து மனம் மாறாத சைவ குழம்பிற்கு ஏற்ற கூட்டு.. கத்தரிக்காய் கடைசல்..!
தேவையான பொருட்கள்:
மிளகாய் – 3
தக்காளி – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
கத்தரிக்காய் – கால் கிலோ
உல்லி – 10
பூண்டு – 5 பற்கள்
செய்முறை:
தக்காளி மற்றும் கத்தரிக்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பூண்டு, உல்லி உரித்து வைத்து கொள்ளவும். பின்னர் ஓரு பாத்திரத்தில் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், சீரகம், உரித்து வைத்திருக்கும் பூண்டு, உல்லி, உப்பு ஆகியவை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
அவிந்ததும் தண்ணீர் வடிகட்டி மத்து போட்டு கடைஞ்சி எடுத்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்துப்பருப்பு போட்டு பொறிந்ததும், 2 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு பொன்னிறமாக வந்ததும் கறிவேப்பிலை சிறிதளவு போட்டு இறக்கி கத்தரிக்காய் கடைசலில் ஊற்றி கிளறி இறக்கி விடுங்கள்.. கத்தரிக்காய் கடைசல் ரெடி..!