சுவிட்சர்லாந்து அரசியல்வாதி மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் உட்பட பலரும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாண அரசியல்வாதியான நத்தாலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது இது முதல் முறை இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் கொரோனா பலருக்கும்
மீண்டும் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனை போன்று இளம் மருத்துவர் ஒருவர் ஏப்ரல் 2020 இல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு சுமார் 7 மாதங்களுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து 10 நாள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார் . இதனை போன்று வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அதில் சில எண்ணிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றால் மீண்டும் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விவகாரம் ஹாங்காங்கிலிருந்து வெளியானது. அதுமட்டுமில்லாமல் 64 பேர் மீண்டும் கொரோனா பாதிப்பால் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .தனியார் செய்தி ஊடகம் ஒன்று ,உலகம் முழுவதும் சுமார் 12,547 பேருக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.