தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள நிலையில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை போன்றவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் ஆக அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் மருத்துவர் ஷாரதா கூறியதாவது “சரியான புள்ளிவிபர தகவல் இல்லை. எனினும் அவசரகால நிலை ஏற்பட்டு இருக்கிறது.
காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகள் இடையே அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அறிகுறிகளுடன் சேரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு முன்பே வேறு சில சுவாசக் கோளாறுகளும் இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.