ஓமிக்ரானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நியோகோவ் என்று உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.
இந்த கொரோனா மென்மேலும் உருமாறி உலக நாடுகளுக்கு பரவுவதால் இதுதொடர்பாக அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் ஓமிக்ரானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய மாறுபாடான நியோ கோவ் என்ற வைரஸ் வவ்வால்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த வைரஸ் சுவாச நோயை ஏற்படுத்துகிற மெர்ஸ் வைரசுடன் தொடர்புடையது என்பதால் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
இருப்பினும் இந்த வைரஸ் “தற்போது மனிதர்களிடையே தீவிரமாக பரவும் தன்மையை கொண்டதல்ல” என்று சீன விஞ்ஞானிகளிடம் இது தொடர்பாக பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ரஷ்யாவின் அரசு வைராலஜி மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.