Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய தவித்த நாய்….. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் லட்சுமிபுரத்தில் தெரு நாய் சுற்றி திரிந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரதாப் என்பவரின் வீட்டிற்குள் தெருநாய் நுழைந்தது. இதனை அடுத்து வெளியே செல்வதற்கான வழியை தேடிய போது சுற்றுசுவரில் இருந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து நாய் தலையை நுழைத்தது. ஆனால் துளையில் சிக்கிக் கொண்டு நாயின் தலை சுவருக்கு வெளியேவும், உடல் சுவருக்கு உள்ளேயும் இருந்தது.

இதனை அடுத்து தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததால் நாயின் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து இரவு முழுவதும் அங்கேயே பரிதவித்தது. நேற்று காலை கண்விழித்து பார்த்த பிரதாப் நாய் சுவரில் சிக்கி இருப்பதை கண்டு உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுவரின் துளையை சற்று பெரிதாக்கி உடைத்து நாயை பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |