கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நேற்று 26 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாமானது நடைபெற்றது. இவற்றில் முதல் தவணை, 2 ஆம் தவணை மற்றும் பூஸ்டர் என மொத்தம் 502 நபர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் போன்றோர் செய்து இருந்தனர். இதேபோன்று பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.