Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே பசுமாடு திருட்டு… அதிரடியாய் கைது செய்த போலீசார்…!!!!!

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து பால் கறந்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகின்றார். இரவு வழக்கம் போல கருப்புசாமி நான்கு மாடுகளையும் தனது தோட்டத்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சசிகலா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட பசு மாடு ஒன்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது பற்றி உடனடியாக சுல்தான் பேட்டை போலீசில் கருப்பசாமி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர்  சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். விசாரணையில் பசுமாட்டை திருடி சென்றது வீ மேட்டூர் சேர்ந்த மணிமாறன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாட்டை மீட்டு மணிமாறனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |