Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலா வேன்-பள்ளி வேன் மோதி விபத்து”…. 5 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!

கன்னியாகுமரியில் சுற்றுலாவேன்-பள்ளிவேன் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களைச் சுற்றி பார்ப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 18 பேர் சுற்றுலா வந்தார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுசீந்திரம் கோவிலுக்கு புறப்பட்டார்கள். இதையடுத்து கன்னியாகுமரி நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் சுவாமிநாதபுரம் பகுதியில் சுற்றுலா வேன் சென்ற பொழுது கன்னியாகுமாரியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி வேன் மாணவர்களை வீடுகளில் இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது எதிர்பாரா விதமாக சுற்றுலா வேனும் பள்ளி வேனும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரண்டு வேன்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. மேலும் சுற்றுலா வேனில் பயணம் செய்த ஐந்து பயணிகள் படுகாயம் அடைந்தார்கள். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பள்ளி வேனில் மாணவர்கள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |