கோடை வெயில் கொடூரமாக தாக்கி கொண்டிருக்கும் நிலையில் சுற்றுலா செல்வதற்கு பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா செல்பவர்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் ரயில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “Buy now pay later” எனப்படும் இந்த திட்டத்தின் மூலமாக கட்டணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.
IRCTC தளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது கேடிஎம் நிறுவனத்தின் இந்த திட்டம் மூலம் கட்டணம் இல்லாமல் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு உரிய கடைசி தேதிக்கு முன்பாக பேடிஎம் நிறுவனத்திடம் கட்டணத்தை செலுத்தி விடலாம். பேடிஎம் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் மூலமாக பொருள்கள் வாங்கி விட்டு பின்னர் தாமதமாக பணத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதே பாணியில் ரயில் டிக்கெட் புக் செய்து விட்டு தாமதமாக பணம் செலுத்தலாம்.
பேடிஎம் நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வட்டி இல்லாமல் கடன் வழங்குகிறது. இந்தத் தொகைக்கு நீங்கள் பொருள் வாங்கிக் கொண்டு கடைசி தேதிக்கு முன்பாக கட்டணத்தை செலுத்தினால் போதும். இதன் மூலமாக ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் செலவில்லாமல் ரயில் டிக்கெட் புக் செய்து கொண்டு பின்னர் தாமதமாக கட்டணம் செலுத்தலாம். இதற்கு எந்த வட்டித் தொகையும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.