தென்ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்கா ஆப்பிரிக்க நீர் யானை, வரிக்குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இந்த பூங்காவில் சாபி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் ஒன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சொகுசு விடுதி போல் பழைய ரயில் பெட்டிகளை மாற்றம் செய்து இந்த பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் சொகுசு விடுதியில் அமர்ந்தபடியே காட்டு விலங்குகளையும், இயற்கை எழிலையும் கண்டு ரசிக்க முடியும்.