தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வரை இருப்பதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டியதில் அரசு கவனமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை நீர்வீழ்ச்சி, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விதித்து டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.