கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தினேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் காரை சாலை ஓரமாக நிறுத்தினார். அதன் பிறகு ஐந்து பேரும் வேகமாக காரில் இருந்து கீழே இறங்கி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 5 பேரும் காரிலிருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.