போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்லவிருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த மாதம் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பயணம் முறையே டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை சைப்ரஸ் நாட்டின் தலைநகரான நிக்கோசியாவிலும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் மற்றும் அந்நாட்டின் லெஸ்போஸ் தீவிலும் பயணங்கள் மேற்கொள்ள விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் புரூனி கூறியதாவது, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாட்டின் அதிகாரிகள் அழைத்தன் பெயரில் போப் பிரான்சிஸ் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் மேலும் இந்த பயணம் குறித்த தெளிவான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.