Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சுருண்ட ZIM….. “சூப்பர் பவுலிங்”….. காயத்திலிருந்து மீண்டு மிரளவைத்த தீபக் சாஹர்…!!

காயத்திலிருந்து மீண்ட தீபக் சாஹர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று முதல் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் சுருண்டு போனது.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் (9 பவுண்டரி), சுப்மன் கில்  72 பந்துகளில் 82 ரன்களும் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்தனர். ஜிம்பாப்வே அணி 189 ரன்களில் சுருண்டு போவதற்கு முக்கிய காரணம்.. இந்திய அணியின் தீபக் சாஹர் தான்.

ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி அந்த அணியின் தொடக்க வீரர்கள் 3 பேரை காலி செய்துள்ளார்.. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக்சகர் காயத்தின் காரணமாக அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் காயத்தின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். இதனால் விரைவில் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தொடர்ச்சியாக காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வே தொடருக்கான ஒரு நாள் போட்டி தொடரில் இடம் பிடித்து அணியின் முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

பவர் பிளே ஓவரில் பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்து அசத்தக்கூடிய தீபக்சகர் இந்தப் போட்டியில் மொத்தம் 7 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே கொடுத்து 3.86 எக்கனாமியில்  3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இவருடன் சேர்ந்து பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |