Categories
மாநில செய்திகள்

சுருங்கிக் கொண்டே வரும் அரசு நிலங்களின் பரப்பளவு…. கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம்…..!!!!!

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக அண்ணாத்துரை இருக்கிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த  மனுவில் இருப்பதாவது “ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதியில் பல்வேறு வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்துவரும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்பாடாமல் இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஆகவே எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு போன்றோர் விசாரித்தபோது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், “அரசு நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் அந்நிலத்துக்கு பட்டா கோர உரிமையில்லை. எனினும் பெத்தேல் நகரில் வசிப்பவர்களில் ஒருசிலர் மட்டுமே ஆரம்பகாலத்திலிருந்து வசித்து வருகின்றனர். மற்றவர்கள் அரசு நிலத்தை அபகரித்தவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியவர்கள் ஆவர்.

ஆகவே அவர்களுக்கு பட்டா வழங்கினால் அபகரிப்புக்கு சட்டஅங்கீகாரம் வழங்கப்பட்டது போல் ஆகிவிடும்” என்று கூறினார். அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “அரசின் அனுமதி இன்றி மாவட்ட கலெக்டரால் நிலத்தை வகை மாற்றம் செய்ய இயலாது. இது போன்ற அபகரிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கிக் கொண்டே வருகிறது. அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த் துறை அதிகாரிகளின் கடமை ஆகும். நிச்சயமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த அபகரிப்புகள் நடந்து இருக்காது. அரசு நிலங்களை அபகரிக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்காக ஒருபோதும் உதவ இயலாது. ஆகையால் இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |