Categories
மாநில செய்திகள்

சுருக்கெழுத்தர் தேர்வு…. ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருகின்ற நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்க எழுத்தாளர், சி, டி நிலை பணிக்கு தேர்வு வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு நடைபெறும் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தேர்வு எழுதுவோர் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் தேர்வர்கள் எடுத்து வரக்கூடாது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 – 2825 1139  என்ற தொலைபேசி எண்ணிலும் 94451 95946 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |