சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாவட்டதில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பாதி சுரங்க பாதைகளையும், நெடுஞ்சாலை துறை மிதி சுரங்க பாதைகளையும் சீரமைத்து வருகிறது. மேலும் வழக்கமாக நீர் தேங்கும் இடங்களில் கூட தற்போது தேங்க வில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.