தமிழகத்தில் சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளை விரிவு படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும்.
மேலும் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 25 ஆயிரம் கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைத்திட வேண்டும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.