சென்னையில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் என்பது உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நரசிம்மன் என்பவர் இன்றைக்கு கோடம்பாக்கம் பகுதியில் இறந்திருக்கின்றார். குறிப்பாக அவர் குடிநீர் வடிகால் வாரிய குழாய் அல்லது கழிவு நீரை அகற்ற கூடிய குழாயில் விழவில்லை. அதில் விழுந்து நரசிம்மன் இறக்கவில்லை. தற்போது பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருவதாகவும், அதற்கு பிறகே அவர் எப்படி இறந்தார் என தெரியவரும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும் ஆணையர் பிரகாஷ் சொல்லியுள்ளார். அதுமட்டுமில்லாமல் போலீசார் விசாரணையில் இருப்பதா குறிப்பிட்டுள்ள ஆணையர், பெருநகர மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் வடிகால் வாரியம் அல்லது கழிவுநீர் அகற்றும் பள்ளத்தில் அவர் விழவில்லை என அறிக்கையை மூலமாக தெரியப்படுத்தி இருக்கிறார்.