மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவாரூரில் வைத்து மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜானகிராமன், சி .ஐ. டி. யு. நிர்வாகி மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். அரசு நுகர்வோர் வாணிப கழக நிர்வாகத்தில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களை அவுட்கோர்சிங் செய்யும் முறையில் தனியார் மயமாக்கும் உத்தரவினை திரும்ப பெற வேண்டும்.
சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு நலநிதி உள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும். பணி நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்கள் நல வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்தை தொழிலாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.