சுமி நகரில் இருந்து பத்திரமாக இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போர் அதிகரித்து வரும் நிலையில் சுமி நகரில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது. “இந்தியர்களை சுமி நகரில் இருந்து மீட்கும் பணி நேற்று இரவு தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து பேருந்துகள் மூலம் போல்டாவா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இது குறித்து நேற்று நள்ளிரவு கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டபோது, 694 இந்திய மாணவர்கள் சுமி நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தன. பின்னர் போல்டாவாவிற்கு பேருந்துகள் மூலம் அனைவரும் அழைத்து வரப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான போர் நடக்கும் போது உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமியின் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 400 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் திங்ககிழமை வெளியிட்ட புள்ளிவிபரத்தில் அடிப்படையில் தெரியவந்து உள்ளது.