கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பறிகொடுத்தனர்.அப்போது நாகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் அன்னை சத்யா இல்லத்தில் வளர்க்கப்பட்டன. அதில் ஒன்பது மாத குழந்தையாக இருந்த சவுமியா மற்றும் மூன்று மாத குழந்தையாக இருந்தே மீனா ஆகிய இருவரையும் அப்போதைய நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்துள்ளார்.
பின்னர் இதில் சௌமியாவுக்கு 18 வயது ஆனபிறகு நாகை மாவட்டத்தை சேர்ந்த மலர்விழி மற்றும் மணிவண்ணன் தம்பதியினர் தத்து எடுத்தனர். இந்நிலையில் சவுமியாவின் திருமணம் நாகை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் உரையாற்றிய அவர் “சுனாமி பேரலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது பாலத்தின் கீழ் அழுதுகொண்டிருந்த 9 மாத குழந்தை தான் இந்த சௌமியா. மனிதநேயம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கிறது.” என அவர் கூறினார்.