Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சுந்தர்.சி படம்… படப்பிடிப்பில் நடனமாடிய யுவன் சங்கர் ராஜா… புகைப்படம் வைரல்…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சுந்தர்.சி படப்பிடிப்பில் நடனமாடியுள்ளார்.

இயக்குநர் சுந்தர்.சி தற்போது காமெடி நிறைந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, தொகுப்பாளினி டிடி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகின்றது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிசெய்யும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டு பாடலொன்றுக்கு நடனமாடியிருக்கின்றார். இதை தொகுப்பாளினி டிடி பதிவிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் நடனமாடிய பின் படக்குழு அனைவரும் அவருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |