அரசு மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆண் சிசுவின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண் சிசுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆண் சிசுவை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.