Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட என்.எல்.சி ஊழியர்…. நூதன முறையில் மோசடி செய்த வாலிபர் கைது….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சம்முட்டிகுப்பம் பகுதியில் நடராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2 சொசைட்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு நடராஜன் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தனது ஏ.டி.எம் கார்டை அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கொடுத்து பணம் எடுத்து தருமாறு நடராஜன் உதவி கேட்டுள்ளார்.

அந்த வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தில் கார்டை பயன்படுத்துவது போல பாவனை செய்து போலியான ஏ.டி.எம் கார்டை நடராஜன் கையில் கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட நடராஜன் தனது பெயர் கார்டில் இல்லையே என வாலிபரிடம் கேட்டபோது அதிர்ச்சடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக நடராஜன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார்(30) என்பது தெரியவந்தது. இவர் பணம் எடுப்பதற்காக வரும் முதியவர்களை குறிவைத்து உதவி செய்வது போல நடித்து போலிஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்துள்ளார். பின்னர் உண்மையான ஏ.டி.எம் கார்டை வைத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 13 போலியான ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |