சுதந்திர தின விழாவின் முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 90 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேசப்பற்று தொடர்பான கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதன் பிறகு மாற்று திறனாளி மாணவர்களின் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியை பார்த்து பொதுமக்கள் அனைவரும் கண் கலங்கினார். இந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர். மேலும் யோகா பயிற்சி சாகசங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகசங்களும் நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.