Categories
உலக செய்திகள்

சுதந்திர தின நூற்றாண்டிற்குள்… இந்திய பொருளாதாரம் இத்தனை லட்சம் கோடியாக மாறுமா?…

இந்தியாவின் சுதந்திர தின நூற்றாண்டிற்குள் அந்நாட்டின் பொருளாதாரமானது, 2400 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான பியூஸ் கோயல், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடிய போது தெரிவித்ததாவது,

இந்திய நாட்டின் சரக்குகள், சேவைக்கான ஏற்றுமதியானது, 675 பில்லியன் டாலர்கள் வரை இருந்தது. வரும் 2030-ம் வருடத்திற்குள், அது 2 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தியா, உலகின் 5-ஆம் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது.

எனவே, நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு வருவதற்குள், பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். மத்திய அரசின் அதிரடியான் சில திட்டங்கள் நன்கு செயல்படும் பட்சத்தில், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். மத்திய அரசின்,  அடித்தளத்தால் பொருளாதாரமானது விரைவில் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |