நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்னையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண கொடியை போற்றும் விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோடை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த நபர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்துள்ளார்.
அதில் மாநகராட்சியாக சேலம், சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுதூர், 2வது குடியாத்தம், 3வது தென்காசி போன்றவை தேர்வு செய்யப்பட்டு அந்த நகராட்சி ஆணையர்கள் தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் சிறந்த பேரூராட்சி காண விருது செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலை கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் பெற்றுக் கொண்டுள்ளார். சிறந்த பேரூராட்சிக்கான இரண்டாவது விருது கன்னியாகுமரி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.
மேலும் அந்த பேரூராட்சியின் தலைவர் தசரதன் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பரிசினை பெற்றுக் கொண்டுள்ளார். சிறந்த பேரூராட்சிக்கான மூன்றாவது விருது மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்திற்கான காசோலை மற்றும் விருதினை சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைவர் ஜெயராமன் போன்றோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.