சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி அவரின் நினைவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “லோக நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அவதார தினத்தில் அவரை வணங்குகின்றேன். அவர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடி உள்ளார்.
நமது ஜனநாயக நெறிமுறைகள் தாக்குதலுக்கு உள்ளான போது, அதைப் பாதுகாக்க ஒரு வலுவான வெகுஜன இயக்கத்தை அவர் வழி நடத்தியுள்ளார்.அவரைப் பொறுத்தவரையில் தேசிய நலன் மற்றும் மக்களின் நலனுக்கு மேலாக இந்த உலகில் எதுவும் கிடையாது”என்று அவர் கூறியுள்ளார்.