Categories
உலக செய்திகள்

“சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது”…. இளம் வயதில்…. சாதனை படைத்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை….!!

அமெரிக்க நாட்டில் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் அரசியல், சமூகம், கலை மற்றும் விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பதக்கங்களை அணிவித்து கௌரவப்படுத்தினார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்த உயரிய விருது, 25 வயதுடைய அமெரிக்க ஒலிம்பிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது. மேலும் கருப்பினத்தை சேர்ந்த சிமோன் பைல்ஸ் 7 ஒலிம்பிக் பதக்கங்களையும் உலகளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அதிக தங்க பதக்கங்கள் என இளம் வயதிலேயே அதிக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Categories

Tech |