கொல்கத்தாவில் சுதந்திரதின நாள் கொண்டாட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.
நாட்டில் சுதந்திரதின விழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி கொடியேற்றி உரையாற்றினார்.
இதையடுத்து அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் மம்தா பானர்ஜி நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.