Categories
லைப் ஸ்டைல்

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து…”நமது உடலை பாதுகாப்பது எப்படி”…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.

கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதை சமாளிப்பது என்பது மிகவும் சிரமம். இதிலிருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்துங்கள்.

வெளியில் செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய இயற்கை பானங்களை அருந்துங்கள்.

குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெப்பம் இல்லாத பகுதிகளில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள், மரங்கள் ஆகியவற்றை மறைத்தும்.

இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் வெட்டவெளியில் பணியாற்றுபவர்கள், ஈரமான உடைகளை பயன்படுத்தவேண்டும்.

கடும் வெயிலில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் இருக்கும் போது பணியில் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

கால்நடைகளை நிழலில் வைத்து பராமரியுங்கள். வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும்.

முடிந்த அளவுக்கு காலையிலேயே உணவுகளை சமைத்து முடியுங்கள். வெயிலில் கடுமையான பணி செய்வதை தவிர்த்து விடுங்கள்.

உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடிய காபி, தேநீர், மது அருந்துவதை குறையுங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழ வகைகளை சாப்பிடுங்கள்.

Categories

Tech |