Categories
பல்சுவை

“சுட்டெரிக்கும் சம்மர்” உடலைக் குளிர்ச்சி படுத்த…. இதோ வெள்ளரி அடை ரெசிபி….!!

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் வெயிலுக்கு சிறந்த உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை நாம் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை தருவது மிகவும் நல்லது. கோடைகாலத்தில் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கலாம். அப்படி வெயிலுக்கு சிறந்த உணவாகத் திகழ்கிறது வெள்ளரிக்காய் அடை. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்க கூடிய உணவு இது. பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் உகந்த வெள்ளரிக்காய் அடை எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 1 கப்
கொண்டைக்கடலை- 1/2 கப்
நறுக்கிய வெள்ளரிக்காய்- 3/4 கப்
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, நல்லெண்ணெய் மற்றும் உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை:
ஊற வைத்த அரிசி, கொண்டைக்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைக்க வேண்டும். அதன் பிறகு வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலக்கி,தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் நன்றாக எண்ணெய் விட்டு வேக விட வேண்டும். பின்பு சூடான சுவையான அடை ரெடி.

Categories

Tech |