உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணீஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் துப்பாக்கி வேலை செய்யாததால் துப்பாக்கி எதற்கு சுடவில்லை? என்று கையில் வைத்து ஆராய்ந்துள்ளார். அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த மணீஷின் நண்பரான பாபு லால் மீது துப்பாக்கி சுட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் பாபு லால் சரிந்து விழுந்தார். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மணீஷ் பயன்படுத்திய துப்பாக்கி பாபு லால் உடையது. இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மாப்பிள்ளை வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1539850001165058049