37 வயது நபர் கொலை சம்பவத்தில் 17 வயது சிறுமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கனடாவிலுள்ள டொரன்ரோவை சேர்ந்தவர் ஷேன் ஷண்ணன். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ரஹீம் என்ற இளைஞரையும் 17 வயது சிறுமி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் 17 வயது சிறுமி பற்றிய தகவல்கள் வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை குறித்து தெரிய வந்தால் காவல்துறையினரிடம் கூறலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் கொடுக்க விரும்புபவர்கள் 416 808 7400 என்ற எண்ணிலும் அல்லது என்ற www.222tips.com இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.