நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அவரின் காதலியான நடிகை ரியா போதை பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றார்.
இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி கைது செய்தனர். ஒரு மாத காலம் சிறையில் இருந்த நடிகை ரியா சக்கரபோர்த்தி பின் ஜாமினில் வெளிவந்தார். ரியாவின் சகோதரர் ஜோகி சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் மூலம் வெளிவந்தார்.
இந்த நிலையில் சுஜாந்த் மரணத்தில் தொடர்புடைய போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 பேருக்கு எதிராக குற்றப்பரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரின் சகோதரிடமிருந்து பலமுறை கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் 2020ஆம் வருடம் டிசம்பர் முதல் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒருவராகவோ அல்லது குழுக்களாகவோ இணைந்து பாலிவுட் மற்றும் உயர் சமூகத்தில் இருக்கும் நபர்களிடம் போதை பொருட்களை வாங்க விற்க விநியோகம் செய்ததாக குற்ற பத்திரிக்கையில் போலீசார் கூறியுள்ளனர்.